தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

Archive for the ‘மேற்கோள்’ Category

இன்னொரு தேர்தல் கூட்டுப்பதிவு

leave a comment »

நண்பர், எழுத்தாளர், பத்திரிக்கையாளர் என அடையாளம் காணப்படும் மாலன், தேர்தலுக்காக ஒரு பதிவினை துவக்கியிருக்கிறார். அதுவும் ஒரு கூட்டுப்பதிவு தான்.நான் எழுதும் தேர்தல் சம்பந்தப்பட்ட கட்டுரைகள் அதிலும் வெளியாகும். அவருடைய கூட்டுப்பதிவு இங்கே பளாக் ரோலில் கிடைக்கும்.

பார்க்க: மாலனின் கூட்டுப்பதிவு

Advertisements

விவாதம்: பெருசு Vs. இளசு

with one comment

Senior Vs. Junior
நன்றி: பிஸினஸ்லைன்

மணிரத்னத்தின் “ஆயுத எழுத்து”, லிங்குசாமியின் “ஜி”, ஷங்கரின் “முதல்வன்” என படங்களை வரிசைப்படுத்தினால் எல்லோரும் முன்வைக்கும் ஒரு வாதம் அரசியலுக்கு இளைஞர்கள் வரவேண்டும் என்பது முன்வைக்கப்பட்டிருக்கிறது. டாடா டீயின் ”ஜாகோ ரே” தளத்திற்கான விளம்பரத்திலும் இளைஞர்களுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி வேண்டும் என்பதும், ஐடியா செல்லுலாரின் விளம்பரங்கள் (அபிஷேக் பச்சன்) அரசியல் ரீதியான தீர்வுகளை எப்படி மக்களிடம் கேட்டு எடுக்க வேண்டும் என்பதை முன்வைத்தும் சொல்லப்பட்டிருக்கும்.

ஜனநாயக நாடுகளில், மிக இளமையான மக்கள் தொகை (18-45) கொண்ட நாடு இந்தியா. ஆனால் இந்திய அரசியல் தலைவர்கள், பிரதமர்கள், ஜனாதிபதிகள் எல்லோருமே 60 வயதினை தாண்டியவர்களாக (ராஜீவ் காந்தி நீங்கலாக) இருக்கிறார்கள். ஒரு இளமையான தேசத்திற்கு முதுமையான தலைவர்கள் என்னவிதமான செய்திகளையும், நம்பிகைகளையும் விதைக்க முடியும்? இன்றைக்கு பாராளுமன்றத்தில் இருக்கும் அத்தனை இளைஞர்களுமே அவரவர் தந்தை, சொந்த கட்சி சார்பாக இருப்பவர்களேயொழிய, நிஜமான நடுத்தர வர்க மக்களின், இளைஞர்களின் இன்றைய தேவைகளை புரிந்து கொள்ளூம் ஒரு பிரதிநிதி இன்று வரை வரவில்லை.

Innovative Radical Reforms Organisation என்ற அரசியல்-சாரா அமைப்பின் தலைவர், வழக்கறிஞர் பிரபாத் குமார் இன்றைய பிஸினஸ்லைனில் மிக முக்கியமான இந்த விஷயத்தினை தொட்டிருக்கிறார். இளைஞர்கள் எப்படி அரசியலை பார்க்கிறார்கள் (”அது சாக்கடை”, “நாம இருந்தமா, நம்ம வேலைய பார்த்தமா சம்பாதிச்சமா” “இறங்கிடணும், அப்பதான் ஒரு 35-40ல வாரிய செயலாளர் போஸ்டிங் வாங்கிடலாம்”) Vs. பெரியவர்கள் எப்படி பார்க்கிறார்கள் என்பது ஒரு மிக முக்கியமாக விவாதிக்க பட வேண்டிய விஷயம்.

கீழே வரும்   கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்

 1. ஏன் ஒரு சராசரி இந்திய இளைஞனுக்கு அரசியல் பார்வையில்லை ?
 2. இந்திய அரசியலில் பெண்களை எப்படி பார்க்கிறது? பெண்கள் அரசியலை எப்படி பார்க்கிறார்கள் ?
 3. அரசியல் ரீதியான முடிவுகளை, இன்றைய இளைஞர்கள் எப்படி புரிந்து கொள்கிறார்கள் அல்லது அவர்களுக்கு அரசியலே புரியவில்லையா?

தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகள்

with one comment

தமிழ்நாட்டில் இருக்கும் பாராளுமனற தொகுதிகள்

 1. திருவள்ளூர் (SC)
 2. சென்னை – வடக்கு
 3. சென்னை – மத்தி
 4. சென்னை – தெற்கு
 5. திருபெரும்புதூர்
 6. காஞ்சிபுரம் (SC)
 7. அரக்கோணம்
 8. வேலூர்
 9. கிருஷ்ணகிரி
 10. தர்மபுரி
 11. திருவண்ணாமலை
 12. ஆரணி
 13. விழுப்புரம் (SC)
 14. கள்ளக்குறிச்சி
 15. சேலம்
 16. நாமக்கல்
 17. ஈரோடு
 18. திருப்பூர்
 19. நீலகிரி (SC)
 20. கோயமுத்தூர்
 21. பொள்ளாச்சி
 22. திண்டுக்கல்
 23. கரூர்
 24. திருச்சிராப்பள்ளி
 25. பெரமலூர்
 26. கடலூர்
 27. சிதம்பரம்
 28. மயிலாடுதுறை
 29. நாகப்பட்டினம் (SC)
 30. தஞ்சாவூர்
 31. சிவகங்கை
 32. மதுரை
 33. தேனி
 34. விருதுநகர்
 35. ராமநாதபுரம்
 36. தூத்துக்குடி
 37. தென்காசி (SC)
 38. திருநெல்வேலி
 39. கன்னியாகுமரி

மொத்த வரைப்படத்திற்கு இங்கே பார்க்கவும் (பிடிப் கோப்பு)