தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

மூன்றாவது அணி???

with 5 comments

ஒவ்வொரு தேர்தலிலும் “மூன்றாவது அணி” என்கிற வாசகம் ஆரம்ப காலத்தில் பிரபலமாக இருந்து, பின் தேர்தலுக்கு மிக அருகாமையில் “கழுதை தேய்ந்து கட்டெறும்பு”-ஆன கதையாய் விளங்காமல் போகும். இதன் பின் பல காரணங்கள் இருக்கின்றன. இந்தியாவில் அமெரிக்கா போல இரட்டை ஆட்சி முறை இல்லாமல் போனாலும், பொதுவான தேசிய கட்சிகள் என்று காங்கிரஸும், பாரதிய ஜனதா தளமும், கம்யுனிஸ்டுகளையும் சொல்லலாம். பகுஜன் சமாஜ் பார்ட்டி (BSP) ஆங்காங்கே தலை காட்டினாலும், நடந்து முடிந்த டெல்லி மாநில தேர்தலில் உதை வாங்கியது மறந்திருக்காது. இதை தாண்டி, அதிமுக மறக்காமல் ஒவ்வொரு முறையும் கர்நாடாகாவில் நிற்கும், தோற்று போகும். திமுக பாண்டிச்சேரியில் நின்று ஜெயித்திருந்தாலும், பாண்டிச்சேரி தமிழ்நாட்டின் ஒரு விரிவாகவே இந்நாள் வரை பார்க்கப்படுகிறது.இந்நிலையில் இந்த தேர்தலில் மூன்றாம் அணிக்கான சாத்தியங்கள் எவையெவை?

பிஜேபி, காங்கிரஸ் இருவரின் அணிகளை தாண்டிய ஒன்று தான் மூன்றாவது அணியாக இருக்க முடியும். கம்யுனிஸ்டுகள் அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தத்தில் யுபிஏவிலிருந்து வெளியேறினார்கள். இன்றைக்கு தேர்தல் தேதிகள் அறிவிக்கப்படாத முன்பே, தமிழகத்தில் அதிமுக-வோடும், ஆந்திராவில்-தெலுகு தேசத்தோடும் கூட்டணியினை முடிவு செய்து விட்டார்கள் (மொத்தம் 81 தொகுதிகள் – தமிழகம் 40 (பாண்டிச்சேரியும் சேர்த்து)+ஆந்திரா 41). தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் மீது அதிகமான அபிமானமோ, எதிர்ப்போ இல்லை. இலங்கை தமிழர்கள் பிரச்சனையினை திமுக அரசு எதிர்கொண்ட விதம் கடுப்பேற்றினாலும், அது ஒரு முக்கியமான பிரச்சனையாக இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. ஆனாலும்,கடந்த இரண்டு ஆண்டுகளில் தமிழகத்தில் செய்யப்பட்ட மின்வெட்டுகள், இயற்கை இடர்களை சரியாக எதிர் கொள்ளாதது, பதவிநீக்கம் செய்யப்பட்ட மந்திரிகள் என திமுக ஒரு தொய்வினை சந்தித்திருக்கிறது என்பது உண்மை. அதே சமயம், அதிமுகவிற்கு மிக தீவிரமாக பேச எதுவுமில்லை என்பதும் உண்மை.

தமிழகத்தினை விட ஆந்திராவில் கூட்டணிக்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. ராஜசேகர் ரெட்டி (காங்) அரசின் மீது கடுங்கோவமும், எரிச்சலும் மக்கள் கொண்டுள்ளார்கள். போதாதாகுறைக்கு சத்யம் ஊழல் வேறு. தெலுகு தேசம் இதுதான் சந்தர்ப்பமென்று பார்த்து “தெலுங்கானா”-விற்கு ஆதரவு இருக்கிறது என இப்போதே பேச ஆரம்பித்து விட்டார்கள். குட்டி தெலுங்கானா கட்சிகளுக்கு இருந்த ஒரே பேர-வர்த்தகமும் இதனால் அடிப்பட்டு போனது. ஆக தெலுகு தேசம்/கம்யு. கூட்டணிக்கு ஒட்டுகள் சேரலாம்.

கேரளாவில் இப்போது போட்டுக் கொண்டிருக்கும் குடுமி பிடி சண்டைகள், நந்திகிராம், சிங்கூர் என நாடறிந்து நாறிய மே.வங்காளம் என கம்யுனிஸ்டுகளுக்கு பிரச்சனைகள் இருந்தாலும், போன முறை பிடித்த 61 தொகுதிகளை விட, கூட்டணி பலத்தோடு இந்த தேர்தலில் அதிக இடங்களை பிடிக்க வாய்ப்புகள் இருக்கிறது. அதிகமான தொகுதிகளை உள்ளடக்கிய உத்தரபிரதேஷில் (80 தொகுதிகள்) – காங்கிரஸோ, பிஜேபியோ பலமாக இல்லை. மாயாவதிக்கு சோனியாவை கண்டால் ஆகாது, அதனால் காங்கிரஸோடு ஜென்மத்திற்கும் கூட்டணி வைக்க முடியாது. பிஜேபியோடு கருத்தியல் ரீதியான பிரச்சனைகள் அதிகம். ஆக மாயாவதி தேசிய அரசியலில் நுழைய அவருக்கிருக்கும் ஒரே வழி கம்யுனிஸ்டுகள். ஒரு வாதத்துக்கு மாயாவதி-ஜெயலலிதா-சந்திரபாபு நாயுடு-கம்யுனிஸ்டுகள் ஒன்று சேர்க்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம், அங்கேயும் குடுமி பிடி சண்டைகள் அதிகம். கர்நாகாவினை பொறுத்தவரை குமாரசாமி என்ன முடிவெடுப்பார் என்று இன்னமும் தெளிவாக தெரியவில்லை. கண்டிப்பாக ஆளும் பிஜேபியோடு கூட்டணி வைக்க மாட்டார். காங்கிரஸுக்கும் குமாரசாமிக்குமான உறவு ஒரு மாதிரியான extra marital affair. எப்போது சேருவார்கள், எப்போது விலகுவார்கள் என்று தெரியாது. ஒருவேளை குமாரசாமி கம்யுனிஸ்டுகளோடு இணைந்தால், தெற்கு மற்றும் உத்தரபிரதேசம் சார்ந்த பேப்பரில் பலமான ஒரு தீவிரமான மூன்றாவது அணிக்கு ஒரு வாய்ப்பிருகிறது.

இன்னமும் முழுமையான தேர்தல் தேதிகள் வராத நிலையில், மேற்சொன்ன கூட்டணியிலேயே பல மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இப்போது மூன்றாம் அணிக்கான வாய்ப்புகள் ஒரளவு பிரகாசமாக இருக்க காரணம், காங்கிரஸ் மற்றும் பிஜேபி – இரு கட்சிகளிலும் தலைமையும், கூட்டணிகளும் பெரியதாக இல்லை என்பதுதானேயொழிய, இது ஒரு சிறப்பான மூன்றாவது அணி என்பது இல்லை.

Advertisements

5 Responses

Subscribe to comments with RSS.

 1. மூன்றாவது அணி தனிப்பெரும்பான்மை பெறுவதற்கு theoretical-ஆகக் கூட வாய்ப்பில்லை. At best, they can play spoil sport for UPA in some places and NDA in others. தேர்தல் முடிந்த பிறகு ஜெயலலிதா வகையறாக்கள் மூன்றாவது அணிக்கு டாடா காட்டி விடுவார்கள். எந்தக் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறதோ அங்கே போய் பேரம் பேசி விட்டு கலந்து விடுவார்கள்.

  srikan2

  February 6, 2009 at 1:05 PM

 2. This has been happening for the last few elections now. A third front starts before the elections and it gets dissolved after the elections. Though they were successful in forming a government way back in 1996 (almost 13 years back), they did rename it to United Front, and lost the immediate elections …

  swami

  February 6, 2009 at 1:27 PM

 3. சுவாமி, ஸ்ரீகாந்த்,

  இன்றைய சூழலோடு நாம் இதை பொறுத்தி பார்க்கவேண்டும். இதற்கு முன்னால் போனதெல்லாம், கடைசியில் காங்கிரஸோடு கூட்டணி சேர்ந்து விடுவார்கள். இந்த முறை அதுபோல ஆக வாய்ப்பில்லை என்று தோன்றுகிறது. வாக்கினை கண்டிப்பாக சிதறடிப்பார்கள். தமிழகத்தில் அதிமுகவும், ஆந்திராவில் தெலுகு தேசமும், மாயாவதியும் இணைந்தால் வாக்குகள் கண்டிப்பாக சிதறும். ஆட்சியை பிடிப்பார்களா என்கிற கேள்வி கொஞ்சம் சிக்கலான கேள்வி. தனியார் நிறுவனங்களின் ஆட்குறைப்பு, பொருளாதார சிக்கல், தனிநபர் சுமைகள் என மாறிக் கொண்டிருக்கும் இக்காலத்தில், கம்யுனிஸ்டுகள் மக்கள் நல திட்டம் போல எதையாவது அறிவித்தால், தமிழ்நாட்டில் இலவச டிவி கொடுத்து ஆட்சியை பிடித்தது போல நடக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

  இன்றைக்கு இந்தியா இருக்கும் சூழலில் எதையும் தீர்மானமாக சொல்ல இயலாது.

  rlnarain

  February 6, 2009 at 1:46 PM

 4. இந்த முறை தொங்கும் பாராளுமன்றம் அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். அத்தனை பெரிய பாஜ அலை செல்வதாகவும் தெரியவில்லை, காங்கிரஸ் எதிர்ப்பும் பெரிதாக இல்லை. மூன்றாவது அணி கூட்டாஞ்சோறு போல் தேர்தலுக்குப் பின் சுயநல அரசியல்வாதிகளால் அமைய வாய்ப்புள்ளது.

  kundavai

  February 6, 2009 at 2:33 PM

 5. //இந்த முறை தொங்கும் பாராளுமன்றம் அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.// அதை தான் நானும் சொல்கிறேன். வழக்கமான மூன்றாம் அணி என்பது ஜனதா கட்சி,மற்றும் பிராந்திய கட்சிகளின் துணை கொண்டு அலையோ அலையோ என்று அலைவார்கள். ஆனால், இந்தமுறை கம்யுனிஸ்ட் முன்னிறுத்தும் மூன்றாம் அணி என்பது கொஞ்சம் வேறுபட்டது. தெற்கில் பிஜேபி சுத்தமாக இல்லை [கர்நாடகா தவிர] வடக்கிலும் எல்லா இடங்களிலும் இல்லை. கம்யுனிஸ்டுகள் எல்லா மாநிலங்களிலும் இருக்கிறார்கள். ஒரளவு வெற்றியும் பெருகிறார்கள். இந்த முறை எவ்விதமான அலையும் [காங்கிரஸ் / பிஜேபி] மக்களிடையே இல்லை. அதை மையமாக வைத்து பேச ஆரம்பித்தால் இதன் விஸ்வரூபங்கள் புரியும். இது லேசான ஆரம்பம் மட்டுமே. சமாஜ்வாடி கட்சிக்கு சரியான இடம் கொடுக்கவில்லை என்று இப்போதே அமர்சிங் உள்ளூர கறுவிக் கொண்டிருக்கிறார். சந்தர்ப்பம் அமைந்தால், அவர்கள் கம்யுனிஸ்டுகளோடு கை கோர்த்து விடுவார்கள். இதே நிலை தான் லல்லு பிரசாத் யாதவிற்கும்.

  rlnarain

  February 6, 2009 at 3:15 PM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: