தேர்தல்-2009

இந்தியாவின் நாடாளுமன்ற தேர்தல் பற்றி பதிவு

வலையுலகில் பிரசாரம்

with 6 comments

கடந்த ஒரு இரு வாரங்களாக, எந்த ஒரு இந்திய வலைத்தளம் சென்றாலும் தவறாமல் கண்ணில்படுவது பிஜேபியின் வலை விளம்பரங்கள். அத்வானியின் வலைத்தளமான http://www.lkadvani.in ற்கு இட்டுச் செல்லும் இவ்விளம்பரங்கள் பிஜேபியின் ட்ரேட் மார்க் ஆரஞ்சில் அத்வானியின் படத்தோடு, “Advani for PM” என்ற வாக்கியத்தோடு காணப்படுகின்றன.

இரண்டு விஷயங்கள்:

1. இந்த விளம்பரங்களுக்கான செலவு மிகவும் குறைவு. எல்லா இந்திய வலைத்தளங்களிலும் அடுத்த மூன்று மாதங்கள் விளம்பரங்கள் கொடுத்தாலும் ஒரு திருமங்கலம் தேர்தல் செலவை விட மிகமிகக் குறைவாகவே ஆகும். இந்தியாவில் ஆன்லைன் மார்கெடிங் செல்லுபடியாகுமா, ‘அதெல்லாம் இந்தியாவில் நடக்காது’ என்றெல்லாம் யோசித்துக் கொண்டிருக்காமல் இப்படிச் செய்வதில் புத்திசாலித்தனம் இருக்கிறது. பலன் வந்தால் நல்ல லாபம், வரவாவிட்டால் அதிகம் நஷ்டமில்லை என்று கணக்குப் போட்டிருக்கலாம்.

2. அக்கட்சியின் overall தேர்தல் உத்தி ஒன்றும் இதில் தெளிவாகத் தெரிகிறது. இவ்விளம்பரங்கள் ‘Vote for BJP’ என்று சொல்லவில்லை. பிஜேபியின் வலைத்தளத்திற்கு செல்லவில்லை. அத்வானி, அத்வானி.இன். இதிலிருந்து பிரதம மந்திரி யார் என்ற கேள்வியில் தனக்கிருக்கும் தெளிவை அக்கட்சி பரைசாற்ற விரும்புகிறது என்று தெரிகிறது. காங்கிரஸில் இது பற்றி இருக்கும் தெளிவின்மையை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுகிறது. இப்பவும் கூட காங்கிரஸ் ஜெயித்தால் யார் பிரதமர் என்று தெளிவாகத் தெரியவில்லை. மன்மோகனுக்கு நாட்டம் இருக்குமா, உடல்நிலை இடம் கொடுக்குமா என்ற கேள்விகள் உள்ளன. அவரை விட்டால் வேறு யார் proxy இருக்கிறார்? பிரணாப்? சிதம்பரம்? ராகுல் தயாரா? தெரியாது. சென்ற தேர்தலுக்கு முன்னால் இருந்த தெளிவின்மையைப் போல் இந்தத் தேர்தலிலும் இருந்தால் தவறில்லை என்று காங்கிரஸ் நினைத்தால் அது தப்புக் கணக்காக இருக்கும் என்றே தோன்றுகிறது.

பிஜேபி இந்த விஷயத்தில் காங்கிரஸின் பலகீனத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொள்ளத் தீவிரமாக முனையும் என்பதற்கு இவ்வலைவிளம்பரங்கள் ஒரு முன்னோடி என்றே நினைக்கிறேன்.

Advertisements

6 Responses

Subscribe to comments with RSS.

 1. இதுதாண்டி வேறொரு செய்தியும் அதில் இருக்கிறது. குழப்பமான சூழலில் காங்கிரஸின் UPA இருக்கும் இந்த காலத்தில், அத்வானி ஒரு தெளிவான கொள்கை உடையவர், இன்றைய பிரச்சனைகளுக்கும், நாளைய பிரச்சனைகளுக்கும் தீர்வு கொடுப்பவர் என்றெல்லாம், எல்.கே.அத்வானி.இன் தளத்தில் ஒவ்வொன்றுக்கும் தீர்வுகள் சொல்லியிருக்கிறார்கள்.

  இது ஒபாமாவின் ஸ்ட்ரடஜி. சமூக, அரசியல், பொருளாதார பிரச்சனைகளை பிரதமர் ஆவதற்கு முன்பே, அல்லது அறிவிப்பதற்கு முன்பே முன் வைப்பது. பிஜேபி என்றைக்குமே காங்கிரஸை விட அதிகமாக தொழில்நுட்பத்தினை உபயோகிக்கும் கட்சி. பிரமோத் மகாஜன் காலத்தில் முதன்முறையாக “நான் வாஜ்பாய் பேசுகிறேன்” என்று தாற்காலிக கால் சென்டரினை வைத்த முதல் கட்சி. இந்த முறை மகாஜன் இல்லை, ஆனால் அருண் ஜெட்லியின் கீழ் வேகமாக வேலைகள் நடக்கின்றன என்று தோன்றுகிறது.

  rlnarain

  February 5, 2009 at 6:30 PM

 2. வலையில் ஆங்காங்கே காணப்படும் அத்வானி ஆதரவு/ஆர்வத்தை (பார்க்க ரீடிஃப் தளத்தில் பின்னூட்டங்கள்) இன்னும் அதிகரிக்கும் முயற்சியாகவும் தெரிகிறது…

  Shankar

  February 5, 2009 at 11:11 PM

 3. வலையில் மேய்கிறவங்களிலே பெரும்பான்மையானவங்க ஓட்டுச்சாவடிக்கு வரதில்லை என்பதை அந்த பீயார் மேனேசர் சீக்கிரமே புரிந்துகொள்வார். 🙂

  prakash

  February 6, 2009 at 9:51 AM

 4. பிரகாஷ்,

  இதை அப்படி பார்க்க முடியாது என்று நினைக்கிறேன். ஜாகோ ரே தளத்தின் ஹிட்டுகளை பார்க்கும்போது, இந்த தேர்தலில் இளைஞர்களின் பங்கு அதிகமாக இருக்கும் என்பது என் எண்ணம். இந்த ஒரு காரணத்தினாலேயே வலை விளம்பரங்கள் வாக்குகளை பெற்று தரும் என்று சொல்லிவிட முடியாது. எல்லா வழிகளைப் போல இதுவும் ஒரு வழிதான்.

  இன்னமும் பிரியாணியும், ரூபாய் நோட்டும் தெளிவாக ஆளும் தேசமிது 🙂

  rlnarain

  February 6, 2009 at 9:56 AM

 5. பிரகாஷ்,

  ஒபாமாவின் பிரசாரக்குழுவின் சிந்தனைவழி நாராயணின் சிந்தனையை ஒத்ததாகத் தான் இருந்தது. வாக்காளர்களை உருவாக்கும் வழிமுறையாக இளம் வாக்காளர்களை எப்படிச் சென்றடைவது என்று யோசித்து செய்த விஷயம். இந்தியாவில் இது செல்லுபடியாகுமா என்பது கேள்விக்குரியதாயினும், செலவு குறைவு என்பதால், முயற்சி செய்வது புத்திசாலித்தனம் என்பதில் சந்தேகமில்லை.

  இந்த விளம்பரங்களில் இன்று பார்த்த புதிய விஷயம் – அத்வானியின் முகத்தோடு கூட ‘It’s possible!’ என்றொரு வாசகம். ‘Yes, we can’ இன் க்ஷீணமான எதிரொலி…சிரிப்புத்தான் வருகிறது…

  srikan2

  February 6, 2009 at 10:16 AM

 6. அனேகமா அந்த மாதிரி ஓட்டுச்சாவடிக்குப் போகாத ஆட்களில் நீங்கதான் நம்பர் ஒன்னுன்னு நினைக்கிறேன்.

  ஓட்டுப்போடுங்கய்யா..

  //வலையில் மேய்கிறவங்களிலே பெரும்பான்மையானவங்க ஓட்டுச்சாவடிக்கு வரதில்லை என்பதை அந்த பீயார் மேனேசர் சீக்கிரமே புரிந்துகொள்வார். 🙂

  tamilnenjam

  February 10, 2009 at 7:29 AM


Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: